டாய்ஸ் ஆர் அஸ் - அமெரிக்க பொம்மை கடைக்கு நிரந்தர மூடுவிழா

அமெரிக்காவில் பிரபலமாக விளங்கிய 'டாய்ஸ் ஆர் அஸ்' பொம்மை சில்லறை விற்பனை நிறுவனம் தனது கடைகளை நிரந்தரமாக மூடிவிட்டது.

கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோவில் உள்ள 10 கடைகள் உட்பட, அமெரிக்காவில் 800-க்கும் மேற்பட்ட 'டாய் ஆர் அஸ்' கடைகள் மூடப்பட்டுள்ளன.

‘சில்ரன்ஸ் பார்கெய்ன் டவுண்’ என்ற பெயரில் 1948-ஆம் ஆண்டு முதல் கடை திறக்கப்பட்டது. ஏறக்குறைய பத்து ஆண்டுகள் கழித்து அதன் உரிமையாளர் சார்லஸ் லாசரஸ் ‘டாய்ஸ் ஆர் அஸ்' என்று பெயரை மாற்றினார். 1980 மற்றும் 90களில் அமெரிக்காவில் சக்கை போடு போட்டன 'டாய்ஸ் ஆர் அஸ்' கடைகள்.

2005-ஆம் ஆண்டு முதல் தள்ளாட ஆரம்பித்த ‘டாய்ஸ் ஆர் அஸ்’ ஆன் லைன் வர்த்தகத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டின் கடைசியில் திவால் நோட்டீஸ் அளித்த நிர்வாகம், இந்த ஆண்டு மார்ச் மாதம் கடைகளை மூடப்பபோவதாக அறிவித்தது.

வெள்ளியன்று கடைசியாக தன் வியாபாரத்தை முடித்துக்கொண்டது ‘டாய்ஸ் ஆர் அஸ்’. இந்த முடிவு குறித்து பலர் தங்கள் வருத்தத்தையும், கடையை குறித்த தங்கள் பழைய நினைவுகளையும் சமூக வலைத்தளங்களில் பதிந்துள்ளனர்.

More News >>