ஜிஎஸ்டி-யால் தமிழகத்துக்கு ஒரு இழப்பும் இல்லை!- அமைச்சர் ஜெயக்குமார்

ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் தமிழகத்துக்கு ஒரு பாதிப்பும் இல்லை என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி முறை இந்திய அளவில் அமல்படுத்தி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி முதல் பாஜக-வினர் பலர், ‘ஜிஎஸ்டி பெரும் வெற்றி பெற்றுள்ளது’ என்ற ரீதியில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் ஜிஎஸ்டி குறித்து தமிழக எதிர்கட்சிகள் எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்து வரும் வேளையில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “ஒரு தேசம், ஒரு வரி என்ற அடிப்படையில் நாட்டை கட்டமைக்க அரசுகள் இணைந்து செயல்படுகின்றன.

ஜிஎஸ்டி முறையை தமிழகம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. ஜிஎஸ்டி-யால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 9 லட்சம் வணிகர்களுக்கு மேல் ஜிஎஸ்டியில் பதிவு செய்துள்ளனர். ஜிஎஸ்டியால் தமிழகத்திற்கு இழப்பு ஏதும் இல்லை சிறு வணிகர்களைப் பாதுகாக்க ஜிஎஸ்டியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

 

More News >>