மாடுகளுக்கு பதில் மகள்களை ஏரில் பூட்டிய விவசாயி.. வறுமையின் கொடூரம்

உத்தரப்பிரதேசத்தில், வறுமை காரணமாக விவசாயி ஒருவர், தனது மகள்களையே ஏரில் பூட்டி, வயலை உழும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜான்சி மாவட்டம் மௌரானிபூர் அடுத்த படாகான் கிராமத்தை சேர்ந்தவர் அச்சேலால். 60 வயதான இவர், தனக்குரிய சிறிய நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்து வருகிறார். இவருக்கு ரவினா மற்றும் ஷிவானி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

நிலத்தை பண்படுத்தி விவசாயம் செய்ய முடிவு செய்த அச்சேலால், டிராக்டர் வாடகைக்கு பணம் இல்லாததாலும், சொந்தமாக உழவு மாடுகள் இல்லாததாலும், தனது 2 மகள்களையே ஏரில் பூட்டி, வயலை உழுது வருகிறார்.

2 மகள்களும், இதை பாரமாக எண்ணாமல், இன்முகத்துடன் தந்தைக்கு உதவியாக உழவுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்தாண்டு மத்தியப் பிரதேச மாநிலம் சேகோரா மாவட்டம் பசந்த்பூர் பங்கரி கிராமத்தில் விவசாயி ஒருவர் வறுமை காரணமாக, மாடுகளுக்கு பதிலாக, ஏரில் தனது மகள்களைக் கட்டி உழவு செய்த கொடுமை அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>