ரஜினியால் விரக்தி ரசிகர் தற்கொலை முயற்சி!
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாததால் ரசிகர் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கடந்த 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த தனது 67ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். முன்பாக ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாக ரசிகர்களை சந்தித்து வந்தார். இதனால், தனது பிறந்தநாள் அன்று தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்தனர்.
ஆனால், அவர் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தார். இந்நிலையில், சேலம் அழகாபுரம் பாறைவட்டத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ஏழுமலை விரக்தி அடைந்துள்ளார். மேலும், கடந்த ஓரிரு நாள்களாக மன வேதனையில் இருந்துள்ளார்.
இதனையடுத்து அவர், வியாழக்கிழமை தனது வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்று, சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து கூறியுள்ள அவர், ”தனது பிறந்த நாளான டிசம்பர் 12 -இல் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தோம். அவர் அரசியலுக்கு வந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். அவரது அரசியல் பிரவேசம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால், தற்கொலைக்கு முயன்றேன்” என்று தெரிவித்துள்ளார்.