நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது கர்நாடகா- ஸ்டாலின் பாய்ச்சல்

”காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசு நாடகம் நடத்திக் கொண்டு இருக்கிறது” என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஸ்டாலின் தற்போது தமிழக நலனுக்காக எப்போதும் போராடத் தயார் என அறிவித்திருந்தார். மேலும் அவர், “நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் எல்லோருக்கும் தெரியும்.

நான் அரசியல் பேசுவதாக நினைக்க வேண்டாம் காவிரி பிரச்னையில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கர்நாடகா அறிவித்துள்ளது பற்றி தமிழக அரசுக்கு கவலையில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவராக ஸ்டாலின் பேசுகையில், “காவிரி ஆணையம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் காவிரி ஆணைய விவகாரத்தில் கர்நாடக அரசு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

More News >>