விஷம் கலந்த குடிநீர் குடித்த 60 மாணவிகள் உயிருக்கு போராட்டம்

ஆப்கானிஸ்தானில் விஷம் கலந்த தண்ணீரை குடித்த 60க்கும் மேற்பட்ட மாணவிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் கிழக்கு பர்வான் பகுதியில் ஜர்பியா பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பள்ளியின் அருகில் உள்ள கால்வாயில் இருந்து மாணவிகளுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை குடித்த சுமார் 100 மாணவிகள் மயங்கி விழுந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், மயங்கிய மாணவிகளை மீட்டு மருத்துவமனையில் அனுக்கப்பட்டனர். இதில், சுமார் 60 மாணவிகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மாணவிகள் தண்ணீர் குடித்த பிறகு தான் மயங்கி விழுந்தனர் என்ற சந்தேகத்தில் போலீசார் குடிநீரை சோதனை செய்தனர். அப்போது, அந்த குடிநீரில் கடுமையான விஷம் கலந்து இருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் குடித்து மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News >>