நிறைவடைந்தது காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம்!
காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம் இன்று ஆணையத்தின் தலைமையகத்தில் நடந்து முடிந்துள்ளது.
இன்றைய கூட்டத்தின் நிறைவில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் குறித்த அறிக்கையை காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவர் மசூத் உசேன் வெளியிட்டார். தீர்மானங்கள் குறித்து மசூத் உசேன் கூறுகையில், “நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதில் மகிழ்ச்சி.
ஆணையத்தின் பணிகள், தேவையான கட்டுமானம், நீர் இருப்பு, திறப்பு அளவு தகவல்கள் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நடுவர் மன்ற தீர்ப்பின் படி ஜூன் மாதத்திற்கு திறக்கப்பட்ட நீர், ஜூலை மாதத்துக்கு திறக்க வேண்டிய நீர் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் ஆலோசித்தோம்.
ஜூலை மாதத்துக்குரிய காவிரி நீரை தமிழகத்துக்கு திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் மாதத்தில் கூடுதலாக தந்த நீர் போக மீதியை தமிழகத்துக்கு கர்நாடக திறக்க வேண்டும்.
ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு கூடுதலாக 3 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது. காவிரி ஆணைய உத்தரவுகளை கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் மதிக்க வேண்டும்