உங்கள் பிள்ளைகளிடமிருந்து தொடங்குகள்- கமல்ஹாசனுக்கு அறிவுரை

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முதலில் தன் வீட்டுப் பிள்ளைகளில் இருந்து தன் மாற்றத்தை ஆரம்பிக்க வேண்டும் என ட்விட்டர் முழுவதும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர் கமலிடம், ‘சாதியை ஒழிக்க என்ன வழி?’ என்று கேட்டுள்ளார். அதற்கு, ‘என் இரு மகள்களின் பள்ளிச் சான்றிதழ்களிலும் சாதி மற்றும் மதம் என்ன என்பதை எழுத நான் மறுத்துவிட்டேன். அது தான் ஒரே வழி. அப்படி செய்வதன் மூலம், நம் செயல் அடுத்தடுத்த தலைமுறைகளை சென்றடையும்.

ஒவ்வொரு தனி மனிதனும் சமூக முன்னேற்றத்துக்கு வழி வகுக்க வேண்டும். கேரளா இதைத்தான் செய்துள்ளது. மாற்றத்தை முன்னெடுத்து செல்பவர்களை நாம் கொண்டாட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதற்கு மற்றொரு ட்விட்டர் பயனர், ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், ‘நான் ஒரு ஐயங்கார்’ என்று வெளிப்படையாக சொல்லிய வீடியோ காட்சியை எடுத்துப் பகிர்ந்து, ‘கமல்ஹாசன் சார், நீங்கள் சாதிப் பெயரை பள்ளி சான்றிதழில் போடவில்லை என்றாலும், உங்கள் சாதி ஒழிப்பு நடவடிக்கை வெற்றி பெறவில்லை.

உங்கள் வீட்டிலிருந்து மாற்றத்தைத் தொடங்குகள் சார். சாதிப் பெயரை போடாததால் சாதி ஒழிந்துவிடாது. குழந்தைகளுக்கு அவர்களின் சாதி என்ன என்பதை தெரியாத வகையில் வளர்க்க வேண்டும்’ என்று விமர்சனம் செய்தார். இதை வைத்து வரும் மீம்ஸ்கள் தற்போது வைரலாகி வருகிறது.

More News >>