நேபாளத்தில் சிக்கிய இந்தியர்கள் மீட்கப்படுவர்- சுஷ்மா ஸ்வராஜ்

நேபாளத்தில் யாத்திரை மேற்கொண்ட இந்தியர்கள் பலர் கனமழையின் காரணமாக அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார்.

கையிலாய யாத்திரை என தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பலர் நேபாளத்தில் உள்ளனர். கடும் மழை காரணமாக நிலச்சரிவு, பனிச்சரிவு என பல அபாயங்களால் மக்கள் அங்கு தவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் சார்பில் மீட்புப் படை நேபாளம் விரைந்துள்ளது. 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்டு பேசுகையில், “நேபாளத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீட்புப் பணிக்கு நேபாள அரசிடம் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட உதவிகள் கோரப்பட்டுள்ளன. இந்தியர்கள் மீட்புப் பணி தொடர்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பாக இருக்கும் இந்தியர்களுக்கு உணவு வழங்க இந்திய பிரதிநிதிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

More News >>