3 மாதம் பொருள் வாங்காதவர்களின் ரேஷன் கார்டு ரத்தாகுமா- அமைச்சா் விளக்கம்!
ரேஷன் கடைகளில் தொடா்ந்து 3 மாதம் பொருள்கள் வாங்கவில்லை என்றாலும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படமாட்டாது என்று தமிழக உணவுத்துறை அமைச்சா் காமராஜ் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகளில் தொடா்ந்து 3 மாதம் பொருள்கள் வாங்காதவா்களின் கார்டு ரத்து செய்யப்படும் என மத்திய அரசு சமீபத்தல் தகவல் வெளியிட்டது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் திமுக உறுப்பினா் சுப்பிரமணியன் இது குறித்து கேள்வி எழுப்பினார்.
கேள்விக்குப் பதில் அளித்த தமிழக உணவுத்துறை அமைச்சா் காமராஜ், “3 மாதங்கள் தொடா்ந்து பொருள்கள் வாங்கவில்லை என்றாலும் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது.
மத்திய அமைச்சா் கூறியது அறிவுரைதான் என்றும், கொள்கை முடிவு இல்லை” என்றும் அவர் விளக்கமளித்தார்.