சுனந்தா புஷ்கர் மர்ம மரண வழக்கு... நீதிமன்றத்தில் சசி தரூர் மனு!
முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து நடத்தப்பட்ட சோதனையில், சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கு விஷம்தான் காரணம் என உறுதிபட தெரியவந்தது.
இது தொடர்பாக சசி தரூர் மீது காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர் இது குறித்து ஜூலை 7-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சசி தரூருக்கு டெல்லி பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் முன் ஜாமின் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சசி தரூர் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
சுனந்தா புஷ்கர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் சசி தரூருக்கு மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளம் மூலம் தகவல் அனுப்பி இருப்பதாகவும் அதில், வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்றும், இறப்பதற்காக பிரார்த்தனை செய்வதாகவும் எழுதப்பட்டிருந்ததாகவும் டெல்லி நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.