ஹர்பஜன் பிறந்தநாள்- தங்கிலீஷில் வாழ்த்து சொன்ன சச்சின்
இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான ஹர்பஜன் சிங் இன்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
பாஜி என்று செல்லமாக அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு ஜாம்பவான் ஹர்பஜன் சிங் இன்று தனது பிறந்தநாளை மனைவி மற்றும் மகளுடன் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்.
பிரபலங்கள் பலர் ஹர்பஜனுக்கு வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டும் பதிவிட்டும் வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் வாழ்த்துச் செய்தி அதிகப்படியான கவனத்தை ஈர்ப்பதாகவே உள்ளது.
சச்சின் தன் ட்விட்டர் பக்கத்தில், ஆங்கில வாழ்த்தை தமிழில் பதிவிட்டுள்ளார். சமிபகாலமாக தமிழில் மொழிலேயே ஹர்பஜன் சிங் ட்வீட் செய்து வருவது கவனிக்கத்தக்கது ஆகும். இந்த சூழலில் சச்சின், “விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே. ஹவ் எ ப்ளாஸ்ட்” என தமிழில் டைப் செய்து பதிவிட்டுள்ளார்.