சென்னையில் இன்று மாலை மழைக்கு வாய்ப்பு!
சென்னையில் இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெப்பசலனம் காரணமாகவும், மேற்குத் திசைக் காற்றின் வேக மாறுபாட்டாலும் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் இன்றைய வானிலை குறித்து பேட்டியளிக்க செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர், “சென்னையில் பகல் முழுவதுமே வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாலை மற்றும் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். தமிழகத்தில் ஆங்காங்கே இரவு நேரங்களில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக சமயபுரத்தில் 17 செ.மீ மழை பெய்துள்ளதாகப் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு ஜூன்- ஜூலை மாதக் காலகட்டத்தில் மட்டும் வழக்கத்தை விட மழைப்பொழிவு அதிகரித்துள்ளது” என்றார்.