இந்தியாவில் 7900 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது வோல்ஸ்வேகன்

பூனாவில் ஸ்கோடா நிறுவனம் புதிய பொறியியல் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு மையம் ஒன்றை ஆரம்பிக்க இருக்கிறது. 200 முதல் 250 எஞ்ஜினியர்கள் உட்பட, நேரடியாகவும் மறைமுகமாகவும் 5,000 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியா 2.0' என்று பெயரிடப்பட்டுள்ள திட்டத்தின்படி, ஜெர்மானிய கார் தயாரிப்பு நிறுவனமான வோல்ஸ்வேகன் 2019 - 2021 கால கட்டத்தில் இந்தியாவில் 1மில்லியன் யூரோ (ஏறக்குறைய ரூ.7,900 கோடி) முதலீடு செய்ய இருப்பதாகவும், இந்த குழுமத்தின் ஸ்கோடா பிரிவு இதை தலைமையேற்று நடத்தும் எனவும் அப்பிரிவின் தலைமை செயல் அதிகாரி பெர்ன்ஹார்டு மையர் தெரிவித்துள்ளார்.

2020-ம் ஆண்டின் பிற்பாதியில் எம்கியூபி (MQB Platform)முறையில் இயங்கும் புதிய எஸ்யூவி (SUV)வகை கார் ஒன்றை இந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. பூனா மற்றும் ஔரங்காபாத் நகரங்களில் ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகளும் விரிவுபடுத்தப்பட உள்ளன.

“ஏற்கனவே இந்தியாவில் பயணியர் வாகன (PV Segment) சந்தையில் நாங்கள் ஏறத்தாழ 2 சதவீத பங்கு வகிக்கிறோம். 2017 - 18 ஆண்டு கணக்கில் 32 லட்சம் கார்களை தயாரித்திருக்கிறோம். 2025-ம் ஆண்டில் இந்தியாவின் வாகன சந்தையில் 5 சதவீதத்தை எட்டிப்பிடிப்பதே எங்கள் குறிக்கோள்” என்றும் தெரிவித்துள்ள மையர், அடுத்த பத்து ஆண்டுகளில் 50 முதல் 60 லட்சம் கார்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் நடந்த தவறுகளை தவிர்த்து, வெற்றிகரமாக செயல்படுவோம் என்று நம்பிக்கை தெரிவித்த பெர்ன்ஹார்டு மையர், 2021 - 2025 கால கட்டத்தில் வோல்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா இரண்டு நிறுவனங்களிலிருந்தும் தலா ஒரு புதிய கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல் அளித்தார்.

More News >>