விரியனிடமிருந்து எஜமானியை காப்பாற்றிய வீரநாய்

அமெரிக்காவின் அரிசோனா மாநிலம். அந்தம் என்ற பகுதியில் காலை நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார் பாலா காட்வின் என்ற பெண்மணி.

மலையின் இயற்கை அழகை ரசித்தபடியே தன் செல்லநாய் டாட் உடன் மெதுவாக நடந்து கொண்டிருந்தார் பாலா. மெய்மறந்து சென்று கொண்டிருந்தவரை, நாய் டாட்டின் குரைப்பு தன்னிலைக்குக் கொண்டு வந்தது.

அடுத்த அடியை எடுத்து வைத்தால் மிதித்து விடும் தூரத்தில் கிடந்தது கொடிய கிலுகிலுப்பை விரியன் பாம்பு. தன் எஜமாட்டியை காப்பாற்றும் வேகத்தில், பாலா காட்வினுக்கும் பாம்புக்கும் இடையே புகுந்தது கோல்டன் ரெட்ரிவர் வகை நாயான டாட். வழியில் கிடந்த பாம்பு, இந்த களேபரத்தில் நாயின் மூக்கின்மேல் கடித்தது.

தன் உயிரை காப்பாற்றிய செல்ல நாயின் உயிரை காக்க, உடனடியாக அருகிலிருந்த கால்நடை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்துள்ளார் பாலா காட்வின்.

தனது முகநூல் பக்கத்தில் இச்சம்பவத்தை பதிவு செய்துள்ள அவர், தனது நாய்க்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

More News >>