ப்ளஸ் 1, ப்ளஸ் 2, 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

தமிழ்நாட்டில் ப்ளஸ் 2, ப்ளஸ் 1 மற்றும் 10ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணைகளை அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையிலும், பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 7ம் தேதி முதல் ஏப்ரல் 16 வரையிலும் பத்தாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 16ந் தேதி துவங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு புதிய தேர்வு முறையாக பிளஸ் 1 மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் 2, ப்ளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான விரிவான அட்டவணையை கீழே பார்க்கலாம்.

பிளஸ் 1 தேர்வு அட்டவணை விபரம்:

07.03.18 - தமிழ் முதல் தாள்08.03.18 - தமிழ் இரண்டாம் தாள்13.03.18 - ஆங்கிலம் முதல் தாள்14.03.18 - ஆங்கிலம் இரண்டாம் தாள்20.03.18 - கணிதம்  விலங்கியல் - நுண்ணுயிரியியல் - ஊட்டச்சத்து மற்றும் உணவியல்23.03.18 - வணிகவியல் - மனையியல் - புவியியல்27.03.18 - இயற்பியல் - பொருளியல்03.04.18 - வேதியியல் - கணக்குப் பதிவியல்13.04.18 - தகவல் தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்) - இந்திய கலாச்சாரம் - கணிப்பொறி அறிவியல் - உயிர் வேதியியல் - மேம்படுத்தப்பட்ட மொழிப்பாடம் (அட்வான்ஸ்ட் லாங்க்வேஜ் -தமிழ்)16.04.18 - அரசியல் அறிவியல் - செவிலியர் கல்வி (பொது) - புள்ளியியல்- தொழில் கல்வி தியரி

பிளஸ் 2 தேர்வு அட்டவணை விபரம்:

01.03.18 - தமிழ் முதல் தாள்02.03.18 - தமிழ் இரண்டாம் தாள்05.03.18 - ஆங்கிலம் முதல் தாள்06.03.18 - ஆங்கிலம் இரண்டாம் தாள்09.03.18 - வணிகவியல் - மனையியல் - புவியியல்12.03.18 - கணிதம் - விலங்கியல் - நுண்ணுயிரியியல் - ஊட்டச்சத்து மற்றும் உணவியல்15.03.18 - அரசியல் அறிவியல் - செவிலியர் கல்வி (பொது) - புள்ளியியல்- தொழில் கல்வி தியரி19.03.18 - இயற்பியல் - பொருளியல்26.03.18 - வேதியியல் - கணக்குப் பதிவியல்02.04.18 - உயிரியல் - வரலாறு - தாவரவியல் - வணிக கணிதம்06.04.18 - தகவல் தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்) - இந்திய கலாச்சாரம் - கணிப்பொறி அறிவியல் - உயிர் வேதியியல் - மேம்படுத்தப்பட்ட மொழிப்பாடம் (அட்வான்ஸ்ட் லாங்க்வேஜ் -தமிழ்)

பத்தாம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை:

16.03.18 - தமிழ் முதல் தாள்21.03.18 - தமிழ் இரண்டாம் தாள்28.03.18 - ஆங்கிலம் முதல் தாள்04.04.18 - ஆங்கிலம் இரண்டாம் தாள்10.04.18 - கணிதம்12.04.18 - மொழி (விருப்பத் தேர்வு).17.04.18 - அறிவியல்20.04.18 - சமூக அறிவியல்

என்றும் அட்டவணைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

More News >>