ரஜினியை தொடர்ந்து அஜித்துடன் ஜோடிபோடும் ஈஸ்வரி ராவ்
காலா படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடிகை ஈஸ்வரி ராவ் நடித்தார். இவரது, நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனையடுத்து, விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், அதில் அப்பா அஜித்திற்கு ஈஸ்வரி ராவ் ஜோடிப்போடுவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு, ஈஸ்வரி ராவும் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
காலா படத்தை தொடர்ந்து, முன்னணி ஹீரோவுடன் நடிக்கும் வாய்ப்பு ஈஸ்வரி ராவுக்கு கிடைத்துள்ளதால் ஹீரோயின்கள் ஆச்சரியப்பட்டு உள்ளனர். விஸ்வாசம் வரும் பொங்களுக்கு ரிலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.