மீண்டும் சாவித்திரியாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்
என்.டி.ஆர் வாழ்க்கை வரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ் மீண்டும் சாவித்ரி வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழில் ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகை என்று பெயர் வாங்கியவர் கீர்த்தி சுரேஷ். இவர், சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, விஜய் உள்ளிட்ட ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். அதன் பிறகு, சமீபத்தில் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்தார். இது அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது.
இந்நிலையில், மறைந்த பழம்பெரும் தொலுங்கு நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வரான என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கில் படமாக எடுக்க அவரது மகன் பாலகிருஷ்ணா முடிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் வரும் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக, கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்ஐத நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.