கனடாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு சுருண்டு 6 பேர் பலி
கனடாவில் அதிகளவில் வெயில் கொளுத்தி வருவதால் இதன் தாக்கம் தாங்க முடியாமல் 6 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவில் வெப்பநிலை கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால், நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். கடும் வெப்பத்தால் செய்வதறியாமல் திணறிக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய கனடாவில் உள்ள மாண்டரியல் நகரில் கொளுத்தும் வெயிலுக்கு சுருண்டு 6 பேர் பலியாயினர். வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், தேவையில்லாமல் யாரும் வெளியில் வர வேண்டாம் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.