ராமதாஸ் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து
பாமக நிறுவனர் ராமதாஸ் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் கடலூர் மற்றும் மதுரை மாவட்டத்துக்குள் நுழைய தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, அரியலூர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசினார்.
இதனால், அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராமதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த விசாரித்த நீதிபதி ஹேமலதா, ராமதாஸ் பேசியது தொடர்பாக அவதூறு வழக்கு தொடர எந்த முகாந்திரம் இல்லை என்று கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.