சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் இயக்குனரின் புதிய முயற்சி
சீமராஜா திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர், " நேற்று இன்று நாளை" படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்குகிறார். இந்த படத்தின் கதைக்களம் விஞ்ஞானம் சம்மந்தப்பட்டதாக இருக்கும் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.
சமீபத்தில் துவங்கப்பட்ட இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்பவர் நீரவ் ஷா. கூடுதல் தகவல்களாக இப்படத்திற்கு உபயோகித்து வரும் கேமரா அலெக்சா. எல்.எப் என்ற புதிய தொழில்நுட்பம் கொண்ட கேமராவாம். இந்தியாவிலேயே முதல் முறையாக பயன்படுத்தப்படும் கேமரா என்ற பெருமையை பெற்றுள்ளது எஸ்.கே.14 திரைப்படம்.
படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாகிறார் ரகுல் பிரித் சிங். கருணாகரன், யோகி பாபு, பானு பிரியா, கோதண்டம் என பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் தயாரிக்க ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, கலை பணிகளை மேற்கொள்கிறார் முத்துராஜ். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வருகிறது இப்படம்.