கோலமாவு கோகிலா படத்தின் இசை, ட்ரைலர் வெளியீடு தேதி அறிவிப்பு
நயன்தாரா நடித்து வரும் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியுள்ளார் நெல்சன். யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின் என பிரபலங்கள் இணைந்துள்ள இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்.
படப்பிடிப்பு முடிந்த நிலையில் தணிக்கை குழுவிற்கு படம் அனுப்பிவைக்கப்பட்டது. படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
கூடுதல் தகவலாக கோலமாவு கோகிலாவில் நயன்தாரா ஒரு மாற்று திறனாளியாக நடித்துள்ளார் என்ற தகவல்கள் கசிய தொடங்கியுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் படத்தின் இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத் இசையில் அணைத்து பாடல்களும் வரும் 6ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இசையுடன் படத்தின் டிரைலரும் வெளியாகும் என்ற தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளது.