தெலுங்கானா பட்டாசு கிடங்கில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி
தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள பட்டாசு கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டிலங்கலா கிராமத்தில் இருக்கும் பட்டாசு கிடங்கில் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் 12 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு ஏராளமான காவலர்லகளும் தீயணைப்புத் துறையினரும் விரைந்துள்ளனர். தொடர்ந்து தீயை கட்டுப்படுத்த அவர்கள் போராடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ், ‘தீ விபத்து ஏற்பட்ட போது 15 பேர் கிடங்குக்கு உள்ளே இருந்துள்ளனர்’ என்று கூறியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட போது சம்பவ இடத்தில் இருந்தவர், ‘ஒரு பெரும் வெடி சத்தம் கேட்டது. உடனே தீ பரவியது’ என்று படபடப்புடன் கூறுகிறார். இந்த விபத்தில் காயமடைந்த 5 பேர் எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்தும், விபத்துக்கான காரணம் குறித்தும் போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.