தங்கத் துகள்களால் வண்ணம் பூசப்பட்ட அசத்தல் பிஎம்டபிள்யூ!
பிஎம்டபிள்யூ புதிதாக முற்றிலும் 24 கேரட் சொக்கத்தங்கத்தால் மேல்பூச்சு கொண்ட பிஎம்டபிள்யூ ஐ3எஸ் மற்றும் ஐ8 ஸ்டார்லைட் ரக கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
முற்றிலும் 24 கேரட் சொக்கத்தங்கத்தால் சொந்தத் தயாரிப்பில் இந்த மாடல் கார்களை உற்பத்தி செய்து வெளியிட்டுள்ளனர். இரண்டு மாடல்களிலும் ஒரேயொரு வடிவமைப்பு மட்டும் டாக்மர் மற்றும் வாக்லவ் ஹேவல் ஃபவுண்டேஷன் விஐஜிஇ 97-இடம் இருந்து வாங்கிப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அளவு மற்றும் வடிவமைப்பு என அத்தனையும் வேறுபட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் இரண்டு புதிய அறிமுகங்களை பிஎம்டபிள்யூ அளித்துள்ளது. தங்கத்தால் மிளிரும் கார் ஒரு நடமாடும் நகைக்கார் போலவே காட்சி அளிக்கிறது என அறிமுகம் கொடுத்துள்ளார், ஸ்டார்லைட் வடிவமைப்பாளர் மற்றும் உற்பத்தியாளர் ஜோல்டன் மசூகா.
பிஎம்டபிள்யூ ஐ3எஸ் மற்றும் ஐ8 ஆகிய இரண்டு மாடல்களும் பிஎம்டபிள்யூ-வின் தொடர் மாடல் ரகங்கள் ஆகும். காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப சில திருத்தங்களும் மாற்றங்களும் வந்துள்ள புதிய மாடல்கள் ஏற்றுள்ளன. ஒரு பிரத்யேக தங்க நிறவூட்டி வழிமுறை இந்தப் புதிய ரக மாடல்களின் மேல்பூச்சுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தம் ஆறு அடுக்கு வண்ணங்கள் மேல்பூச்சு ஆகப் பூசப்பட்டுள்ளது. செக் குடியரசின் பராகுவே நகரில் வருகிற ஜூன் மாதம் 21-ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ ஐ3எஸ் மற்றும் ஐ8 ஆகிய இரண்டு கார்களும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. பிஎம்டபிள்யூ ஐ8 மட்டும் ஜூலை 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெற்ய்ம் கார்லோவி சர்வதேச திரைப்பட விழாவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.