இந்தோனேசியாவில் படகு விபத்தில் சிக்கி 31 பேர் பலி
இந்தோனேசியாவில் நேற்று ஏற்பட்ட படகு விபத்தில் இதுவரை 31 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள சுலாவேஸி தீவு பகுதியில் சுமார் 164 பேருடன் படகு ஓன்று சென்றது. அப்போது இந்த படகு நடுக்கடலில் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்க 12 பேர் பலியானதாக நேற்று தகவலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்து மேலும் 19 பேர் கடலில் மூழ்கி பலியாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி மொத்தம் 31 பேர் பலியானது தெரியவந்துள்ளது.
இந்த படகில் 48க்கும் மேற்பட்ட கார்கள், மோட்டார் சைக்கிள்கள் இருந்துள்ளது என்றும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுத்து சென்றதால் இந்த விபத்து ஏற்பட முக்கிய காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கடல் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.