தெலுங்கில் டப்பிங் பேசிய சூர்யா
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் படம் தெலுங்கில் ‘கேங்’ என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது. இதுவரை சூர்யா நடித்து தெலுங்கில் டப்பிங் செய்யப்படும் படங்களுக்கு அவரே தெலுங்கில் டப்பிங் பேசியதில்லை. முதல் முறையாக ‘தானா சேர்ந்த கூட்டம்‘ படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘கேங்’ படத்தில் சூர்யாவே டப்பிங் பேசியுள்ளார்.