70 இடங்களில் வருமானவரித்துறையினர் திடீர் ரெய்டு!
தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 70 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது.
தமிழகத்தில் சென்னை, நுங்கம்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பல இடங்களில் ரெய்டு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேபோல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், அரசின் சத்துணவு திட்டத்திற்கு பொருட்கள் வழங்கும் கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
இதுவரை நடந்த சோதனையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சோதனை நடத்தப்படுவதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.