எந்த கட்சியிலும் ரஜினி சேரமாட்டார் : அண்ணன் உறுதி
ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.இதில் ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணராவ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரஜினி எனக்கு தம்பியாக கிடைத்து இருப்பது நான் செய்த பாக்கியம். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகின்றனர். அவர் அரசியலுக்கு வந்தால் ஏழை எளியோருக்கு நன்மைகளை செய்வார். அவர் சிறந்த ஆன்மீகவாதி. ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்பு அரசியல் கட்சியினரால் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறார்.
அவர் அரசியலில் ஈடுபடுவது குறித்து அவரே அறிவிப்பை வெளியிடுவார். பா.ஜ.க. உள்ளிட்ட எந்த கட்சியிலும் ரஜினி சேரமாட்டார்.