புதுச்சேரி ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது- குழப்பும் உச்ச நீதிமன்றம்
புது டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருக்கிறது, ஆளுநருக்கு உச்சபட்ச அதிகாரம் கிடையாது என்று நேற்று ஒரு அதிரடியான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. மேலும், இத்ந்ந் சட்டம் மற்றொரு யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கும் பொருந்துமா என்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு, அரசு விவகாரங்களில் தன்னிப்பட்ட முடிவெடுக்கம் அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. உண்மையான அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மட்டுமே இருப்பதாக தீர்ப்பை தந்துள்ளது, 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு. இந்த தீர்ப்பு, துணை நிலை ஆளுநருடன் முட்டி மோதிக் கொண்டிருந்த ஆம் ஆத்மி அரசுக்கு பெரிய வெற்றியை தந்துள்ளது.
புதுச்சேரிக்கும் டெல்லியின் நிலைமை பொருந்துமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம், ‘டெல்லிக்கு அரசு சட்ட சாசனம் 239 AA பிரிவின் கீழ் அதிகாரம் வழங்கியுள்ளது. ஆனால், புதுச்சேரிக்கோ 239 A பிரிவின் கீழ் மட்டுமே அதிகாரத்தை வழங்கியுள்ளது. இதை வைத்துப் பார்த்தால், டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் பெரும்பான்மை அதிகாரம் இருக்கும்.
ஆனால், புதுச்சேரிக்கோ மக்களால் தேர்நெடுக்கப்பட்ட பிரதிநிதிகளோ அல்லது நியிமிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களோ ஆட்சி நடத்த முடியும். அங்கு ஆளுநருக்கு அதிக அதிகாரம் உள்ளது’ என்று கூறியுள்ளது. புது டெல்லி குறித்த தீர்ப்பு வந்ததையடுத்து, ‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இந்த தீர்ப்பு, புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும்’ என இதுப்பற்றி கூறியிருக்கிறார் முதல்வர் நாராயணசாமி.
மேலும், தீர்ப்பை ஏற்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் செயல்படா விட்டால், அவர் மீது வழக்கு தொடர போவதாகவும் தெரிவித்திருக்கிறார். அதனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி நடந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் முதல்வர் நாராயணசாமியின் கருத்துக்கு எதிராக உள்ளது.