இரு சக்கர வாகனங்களில் உடன் செல்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்
இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. அப்படி விதியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இருப்பினும் இது கட்டாயமாக்கியது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டுது. அப்போது, இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் கார்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் சீல் பெல்ட் அணிய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இரு சக்கர வாகனங்களில் பகல் நேரங்களில் எல்இடி விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சீட் பெல்ட், இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பித்த சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பாக அறிக்கையை வரும் 27ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.