அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை மீது ஏறி போராடிய பெண்!

அமெரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை 4 அன்று, டிரம்ப் நிர்வாகத்தை எதிர்த்து பெண் ஒருவர் உலக புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை மீது ஏறி போராட்டம் நடத்தினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 300 அடிக்கும் மேல் உயரமான சுதந்திரதேவி சிலை நிறுவப்பட்டுள்ளது. இது பிரெஞ்சு மக்கள், அமெரிக்காவுக்கு வெகுமதியாக கொடுத்தது. இது புகழ் பெற்ற சுற்றுலா இடமாகும்.

ஜூலை 4-ம் தேதி, அமெரிக்கா சுதந்திரம் பெற்ற நாளாகும். விடுமுறை நாளான அன்று சுதந்திரதேவி சிலை மேல் பெண் ஒருவர் ஏறினார்.

அமெரிக்க மெக்ஸிகோ எல்லையில் பெற்றோரை விட்டு பிரிக்கப்பட்ட குழந்தைகள், குடும்பத்தோடு சேர்க்கப்படும் வரைக்கும், தான் இறங்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.

டிரம்ப் அரசின் 'சகிப்புத் தன்மை இன்மை' கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் தாம் போராடுவதாகவும் அவர் கூறினார்.

தெரேஸ் பாட்ரீஷியா ஒகோமா என்ற 44 வயதான அப்பெண், கானா நாட்டிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா வந்தவர் என்றும், தற்போது நியூயார்க் நகரில் வசித்து வருவதும் விசாரணையில் தெரிய வந்தது. தெரேஸை காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இப்போராட்டம் காரணமாக, சுதந்திரதேவி சிலையை பார்வையிட, பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

More News >>