காவல்துறை அதிகாரி பெரிய பாண்டியன் உடலுக்கு கார்த்தி நேரில் அஞ்சலி
தீரன் அதிகாரம் ஒன்று படம் போல் வடமாநில கொள்ளையனை பிடிக்க காவல்துறை அதிகாரி பெரிய பாண்டியன் ராஜஸ்தானுக்கு சென்று எதிர்பாராவிதமாக கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அரசுமரியாதையுடன் பெரிய பாண்டியன் உடல் சொந்தஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் கார்த்தி பெரியபாண்டியனின் மனைவியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவரது மனைவி "என் கணவர் ராஜஸ்தான் சென்ற போது தான் தீரன் படத்தை பார்த்தேன், என் கணவர் இதுபோல் ஒரு பெரிய கொள்ளையனை தான் பிடிக்கப்போய் இருக்கிறாரா என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் இவ்வளவு சீக்கிரம் அவரது இறப்பு செய்தியை கேட்பேன் என்று எதிர்பார்க்கவில்லை" என கூறினார்.
மேலும், கார்த்தி குறிப்பிடுகையில் "உண்மை சம்பவம் தீரன் படத்தில் நடிக்கும் போதே எனக்கு இப்படியெல்லாம் நடந்திருக்கிறதே என்று மனஅழுத்தமாக இருந்தது.
அது தற்போது உண்மையில் ஒரு இன்ஸ்பெக்டருக்கு நடந்திருப்பது எனக்கு மிகுந்த மனவருத்தத்தை கொடுத்துள்ளது. நமது அரசாங்கம் காவல்துறைக்கு பல உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கவேண்டும்" என்றார்.