அனைத்து அதிகாரம் படைத்தவர் தலைமை நீதிபதி- உச்சநீதிமன்றம்

வழக்குகளை ஒதுக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் செய்தியாளர்களை சந்தித்த, உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டினர். நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக செய்தியாளா்களை சந்தித்து நீதிபதிகள் இத்தகைய புகாரை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைதொடர்ந்து, முன்னாள் சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷண், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இதில் வழக்குகளை தலைமை நீதிபதி மட்டும் வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை ரத்து செய்து விட்டு, 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை கொண்டு வர உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு விசாரித்து வந்தது. நீதிபதிகளுக்கு எல்லாம் தலைமை நீதிபதி தான் தலைவர் என்பதில் எந்த பிரச்னையுமில்லை. அவருக்கு, வெவ்வெறு அமர்வுகளுக்கு வழக்குகளை ஒதுக்க அதிகாரம் உள்ளது.வழக்குக்காக கொலிஜியம் தினமும் ஒதுக்கீடு செய்தால் பணிக்சுமை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனா்.

More News >>