ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிய வெரிஸான்: அதிர்ச்சியில் ஐ.டி ஊழியர்கள்
வெரிஸான் நிறுவனம் ஆயிரக்கணக்கான பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியிருப்பது, இந்திய ஐ.டி நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வெரிஸான் நிறுவனம் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய இடங்களில் பணிபுரிந்துவந்த 14 சதவிகித ஊழியர்களை (ஆயிரத்துககும் மேற்பட்டோரை) திடீரென பணி நீக்கம்செய்துள்ளது. இதேபோல, காக்னிசென்ட், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களும் ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
வெரிஸான் நிறுவனம் எந்த முன்னறிவிப்பும் இன்றி, மூத்த ஐ.டி மேலாளர் அந்தஸ்தில் இருக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் 50 சதவீத ஊழிகர்களை பணிநீக்கம் செய்யவும் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் , அமெரிக்காவிலேயே இனி ஐ.டி பணிக்கு ஆட்களைத் தேர்வுசெய்ய வேண்டும்' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வெரிஸானுக்கு எதிராக, ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். வெரிஸான் ஐ.டி. நிறுவனம் சட்டவிரோத ஆட்குறைப்பு நடவடிக்கையை மூடிமறைக்க முயல்வதாக யூனியன் ஆஃப் ஐ.டி. அன்டு ஐ.டி.எஸ். தொழிலாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.