பிறந்தது மார்கழி... கோயில்களில் சிறப்பு வழிபாடு
மார்கழி மாதம் பிறந்தததைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
அதிகாலையில், பெண்கள் வீடுகளைத் தூய்மை படுத்தி வாசலில் வண்ணக் கோலமிட்டு வழிபாடு நடத்தினர். வீடுகளில் ஆண்டாள் பாடிய திருப்பாவை பாடல்களைப் பாடியும், கூட்டாக பஜனை பாடி வீதிகளில் உலாவந்தும் வழிபட்டனர்.
தேவர்களின் மாதம் என்று அழைக்கப்படுகின்றது மார்கழி. இம்மாதத்தை மார்க்கண்டேய புராணம், ‘மரணத்தை வெல்லும் மார்கழி’ என்று போற்றுகிறது. இந்த மாதத்தில்தான் மார்க்கண்டேயன் சிவபெருமானை வணங்கி மரணத்தில் இருந்து தப்பி, நித்ய வாழ்வைப் பெற்றார் என்று கூறுகிறது.