இனி இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்படும்!- பிரகாஷ் ஜாவ்டேகர்
இனி அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்கான தகுதித்தேர்வாக நடத்தப்படும் நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகள் ஆன்லைன் மூலம் வருடத்துக்கு 2 முறை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தேர்வுகளை புதிதாக கட்டமைக்கப்பட்ட தேசிய தேர்வு நிறுவனம் எனும் நிறுவனம் நடத்தும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஜெ.இ.இ தேர்வும், பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நீட் தேர்வும் நடத்தப்படும் எனவும் மத்திய அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த இரண்டு தேர்வுகள் மட்டுமின்றி, யு.ஜி.சி நெட் மற்றும் சி.எம்.ஏ.டி ஆகிய தேர்வுகளும் தேசிய தேர்வு நிறுவனத்தால் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.