வெகு விமர்சையாக 37-வது பிறந்தநாளைக் கொண்டாடினார் தோனி
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி தனது 37-வது பிறந்தநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஐரோப்பாவின் வேல்ஸ் நாட்டின் தலைநகரமான கார்டிஃப் நகரில் தற்போது இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
இந்நகரில் தான் தற்போது இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் தோனி தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளார். தனது மனைவி சாக்ஷி, மகள் ஜிவா உடன் கிரிக்கெட் நண்பர்கள் புடை சூழ பிறந்தநாளை தோனி கொண்டாடியுள்ளார்.
விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மா உடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார்.