காங்கிரஸ் ஒரு பெயில் கட்சி- காங்கிரஸ் மீது மோடி தாக்கு

இன்றைய பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர்கள் பலர் ஜாமினில் வெளியே இருப்பதால் அக்கட்சியை ’ஜாமின் வண்டி’ எனப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சசி தரூருக்கு இன்று அவரது மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் ஜாமின் வழங்கப்பட்டது. இதைத் தாக்கும் வகையிலேயே பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியைத் தாக்கி விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தான் பொதுத் தேர்தலுக்கு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி இன்று தனது பிரச்சாரத்தை ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூர் நகரில் நடத்தினார். அப்போது பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரபலங்களும் மூத்தத் தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களும் இன்றைய சூழலில் ஜாமினில் தான் வெளியில் உள்ளனர்” எனக் குறிப்பிட்டார். மேலும் பாஜக குறித்துப் பேசுகையில், “ஊழல் மீது எந்த ஒரு சமரசமும் எங்களுக்குக் கிடையாது. எங்களுடைய முழு முயற்சியும் புதிய இந்தியாவை வடிவமைப்பது தான்” எனக் கூற்னார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சசி தரூர் இன்று தனது மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் ஜாமின் பெற்றுள்ளார். இவர் மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி மற்றும் இந்நாள் தலைவரான ராகுல் காந்தி ஆகியோரும் கூட தேசிய ஹெரால்டு முறைகேடு வழக்கில் ஜாமினில் தான் உள்ளனர்.

 

More News >>