சுவீடனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து!
ரஸ்யாவில் நடந்து வரும் ஃபிபா கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்வீடனை வீழ்த்தி இங்கிலாந்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.
28 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்து கால்பந்து அணியினர் தற்போது ஃபிபா கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர். இன்றைய போட்டி சமாராவில் இங்கிலாந்து அணிக்கும் ஸ்வீடன் அணிக்கும் நடந்தது.
இங்கிலாந்து- ஸ்வீடன் இடையேயான போட்டியில் இங்கிலாந்து கால்பந்து அணியினர் 2-0 என்ர கோல் கணக்கில் ஸ்வீடனை எளிதாக வீழ்த்தியது. 1990-ம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்து அணியினர் கால்பந்து உலகக்கோப்பைத் தொடரில் முதன்முதலாக அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.
இதையடுத்து இங்கிலாந்து அணி மீதான உலகக்கோப்பை எதிர்பார்ப்பு இங்கிலாந்து ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.