ரஷ்யாவை வீழ்த்தி குரோஷியா அரையிறுதிக்கு முன்னேறியது
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நான்காவது காலிறுதி போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை வீழ்த்தி குரோஷியா அரையிறுதிக்கு முன்னேறியது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி விறுவிறுப்பாக ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக் அவுட் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் காலிறுதி சுற்றுக்கான போட்டிகள் கடந்த இரண்டு நாட்களில் நடந்தது.
இதில், நான்காவது காலிறுதி போட்டி இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணிக்கு ரஷ்யா - குரோஷியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. போட்டிய தொடங்கியது முதல் அரையிறுதிக்கு முன்னேறியே ஆக வேண்டும் என்ற வெறியுடன் வீரர்கள் ஆடியது பார்வையாளர்களுக்கு தெரிந்தது. இந்நிலையில், 31வது நிமிடத்தில் ரஷ்யா வீரர் டெனிஸ் செரிஷேவ் ஒரு கோல் அடித்தார். இதன் மூலம், ரஷ்ய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப்பெற்றது.
இதைதொடர்ந்து, 39வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஆண்ட்ரே கிரிமெரிக் ஒரு கோல அடித்தார். இதன் மூலம், ஆட்டத்தின் முதல் பாதியில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமனிலைப் பெற்றது.
தொடர்ந்து விளையாடிய, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதனால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்போது, ஆட்டத்தின் 100வது நிமிடத்தில் குரோஷியா வீரர் டொமகோஜ் விஜே ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதன்மூலம், முதலாவது கூடுதல் நேரத்தில் குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து, இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் 115வது நிமிடத்தில் ரஷ்யா அணியின் பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார். இதனால், இரு அணிகளும் மீண்டும் 2-2 என்ற கோல் கணக்கில் சமனிலை பெற்றது.
இறுதியாக, இரு அணிக்கும் பெனால்டி ஷ¨ட் அவுட் முறை வழங்கப்பட்டது. இதில், ரஷியா அணியின் கோல் வாய்ப்பை குரோஷியா தடுத்துவிட்டது. ஆனால், குரோஷியா ஒரு கோல் அடித்தது. இரண்டாவது வாய்ப்பில், ரஷ்யா ஒரு கோல் அடித்தது, குரோஷியாவின் கோல்லை ரஷ்யா தடுத்தது. மூன்றாவது வாய்ப்பில் குரோஷியா ஒரு கோல் அடிக்க, ரஷ்யா வாய்ப்பை தவறவிட்டது. நான்காவது வாய்ப்பிலும் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன.
இறுதியாக, 5வது வாய்ப்பில் ரஷ்யா கோல் போட்டது. தொடர்ந்து, குரோஷியாவும் ஒரு கோல் அடித்து 4-3 என்ற கோல் கணக்கில் குரோஷியா அரையிறுதிக்கு நுழைந்தது.