ப.சிதம்பரம் வீட்டில் இருந்து பல கோடி மதிப்பு நகைகள் அபேஸ்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் பணம், நகைகளை கொள்ளையடித்து தப்பி உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்ராக இருந்தவர் ப .சிதம்பரம். இவரது வீடு சென்னை நும்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், ப.சிதம்பரம் குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றிருந்தார். இந்நேரத்தில், மர்ம நபர்கள் சிலர் ப.சிதம்பரம் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
மேலும், மர்ம நபர்கள் வீட்டிற்குள் இருந்த ரூ.1.10 லட்சம் ரொக்கம், தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடித்து தப்பி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், ப.சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்தினர். மேலும், வழக்குப் பதிவு செய்த ஆயிரம் விளக்கு போலீசார் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.