கல்லூரி பேராசிரியராக சூப்பர் ஸ்டார்: கசிந்தது கார்த்திக் சுப்புராஜ் கதை
ரஜினி அரசியலில் அடியெடுத்து வைத்த பின்னர் வெளிவந்த முதல் படம் காலா. கடந்த மாதம் 7ம் தேதி ரிலீஸ் ஆனது. கலப்பட விமர்சனங்களை பெற்ற காலா, நல்ல வசூல் செய்தது. ஒரு புறம் கட்சி பலபடுத்தும் பணிகள் நடைபெற்று வந்தாலும் மற்றொரு புறம் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினிகாந்த்.
தற்போது ரஜினி அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்து வருகிறார். ஹிமாச்சல் பிரதேசம், மேற்கு வங்காளத்தில் உள்ள மலை பகுதிகளில் வேகமாக வளர்ந்து வருகிறது படப்பிடிப்பு. இம்மாதம் 10ம் தேதி சென்னை திரும்புகின்றனர் படக்குழுவினர்.
இந்நிலையில், இப்படம் ஊட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் நடக்கும் கதையாகவும், அதில் ரஜினி ஒரு கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்ற தகவலும் கசிந்துள்ளன.
மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடிக்கிறார், படத்தின் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.