இனி சிவப்பு நிறம் டிக்: எச்சரிக்கை செய்யும் வாட்ஸ்-அப்
கையடக்க சமூக வலைத்தளங்களில் ஒன்றில் முக்கியமானது வாட்ஸ் அப் செயலி. செய்திகளை உடனுக்குடன் பகிர்வதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதே நேரம் ஒரு பொய்யான அல்லது போலியான தகவல்களை பகிர்வதிலும் வாட்ஸப் செயலிக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.
இப்படியான போலி செய்திகளை கண்டறிய ஒரு புதிய மேம்படுத்தப்பட்ட வாட்ஸ் அப் செயலியை சோதனை செய்து வருகிறது வாட்ஸ் அப் நிறுவனம். முதலாவதாக போலியான செய்தி எது என்பதை கண்டறியும் புதிய அம்சம் இந்த புதிய செயலியில் சோதனை செய்து வருகிறது வாட்ஸ் அப்.
ஒருவர் ஒரு குழுவுக்கு பார்வார்டு செய்யும் ஒரு செய்தி போலியானதா என்பதை குறித்து இந்த புதிய அம்சம் எச்சரிக்கை செய்யும்.
வலைதள முகவரி கொண்டு வாட்ஸ் ஆப்பின் மூலம் அனுப்பப்படும் தகவல்கள் போலியானதா என்பதை தானே கண்டறிந்து முதலில் அதனை அனுப்புபவருக்கு எச்சரிக்கை செய்யும்.
புதிய அம்சம் கொண்ட வாட்ஸ் ஆப் செயலுக்கு வந்ததும் ஒருவரிடம் இருந்து உங்களுக்கு வரும் தகவலில் அல்லது பார்வார்டுல் இருந்து எடுக்கபடும் வலைதள முகவரிகளை வாட்ஸ் ஆப் பின்னணியில் ஆய்வு செய்யும்.
சோதனையில் எதாவது பிரச்சனை இருந்தால் அது வாட்ஸ் ஆப் பயனருக்கு எச்சரிக்கை செய்யும். வரும் குறுந்செய்தியில் ஏதேனும் போலியான வலைதள முகவரி இருக்கும் பட்சத்தில் அது சிவப்பு நிறம் டிக் ஆக மாறும்.
சில நேரம் மால்வார் லிங்க்கள் இந்த மாதிரி பார்வார்டு செய்திகளில் ஒளிந்து வரும். அதற்கென புதிய வாட்ஸ் -ஆப் தற்போது வெளிவரவுள்ளது.