3வது டி20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் ரோகித், பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்துடன் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வென்றது.
இந்நிலையில், இந்தியா மற்றும் இங்கிலந்து அணிக்கு இடையே மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.இதன்மூலம், 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இதில், தொடக்க வீரரான ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். 56 பந்துகளின் சதம் அடித்தார். இதற்கிடையே, தவான் மற்றும் ராகுல் ஆகியோர் மிக குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இவர்களை தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு எடுத்த சென்றார். இந்நிலையில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற இந்திய அணி 2&1 என்ற புள்ளிக்கணக்கில் இத்தொடரை கைப்பற்றியது.