ரயில் தடம் புரண்டு விபத்து: 10 பேர் பலி 73nbspபேர் படுகாயம்
துருக்கியில் ரயில் தடம புரண்டு ஏற்பட்ட விபத்தில் பயணிகள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பல்கேரியா, கபிகுல் பகுதியில் இருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல் பகுதிக்கு பயணிகள் ரயில் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, தெகிர்டாக் என்ற பகுதியில் ரயில் வந்துக் கொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டது.
இந்த ரயிலில், பயணம் செய்த 360க்கும் மேற்பட்ட பயணிகளில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 73 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் தெரியவந்தை அடுத்து, மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதில், சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். அப்போது, படுகாயமடைந்த பயணிகளுக்கு முதலுதவி அளிப்பதற்காக நூற்றுக்கும்மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அந்நாட்டு அதிபர் எர்டோகன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.