மைசூர் போண்டா ரெசிபி செய்யலாம் வாங்க..
கார ஸ்நாக்ஸ் வகைகளில் பஜ்ஜி, போண்டா போன்றவை தான் சாப்பிட பெஸ்ட்னு சொல்லலாம். அந்த வகையில், இணைக்கு நாம போண்டா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..
தேவையான பொருட்கள் :
உளுத்தம் பருப்பு - 1 கப்பச்சை மிளகாய் - 2இஞ்சி - ஒரு சிறு துண்டுகறிவேப்பிலை - சிறிதுகொத்துமல்லி - சிறிதுதேங்காய் (சிறு துண்டுகள்) - 2 டேபிள்ஸ்பூன்மிளகு - 1 டீஸ்பூன்சீரகம் - 1/2 டீஸ்பூன்உப்பு - தேவைக்கேற்றவாறுஎண்ணெய் - பொரிக்க
செய்முறை :
உளுத்தம் பருப்பை சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதை நன்றாகக் கழுவி, நீரை ஒட்ட வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு, உப்பு சேர்த்து மைய அரைக்கவும். அவ்வப்பொழுது சிறிது நீரைத் தெளித்து அரைத்தால் உளுந்து நன்றாக அரைப்பட்டு மென்மையாக இருக்கும். தண்ணீர் அதிகம் ஊற்றாமல் கட்டியாக அரைக்க வேண்டும்.
இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிகொள்ளவும்.
அரைத்த மாவில் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, மிளகு, சீரகம், தேங்காய் துண்டுகள் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மாவை எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு சிவக்க சுட்டெடுக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.