நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயாவை கொடூரமாக பலாத்காரம் செய்து பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். இதில், ஒருவன் சிறுவன் என்பதால், தண்டனையில் இருந்து தப்பினான். மேலும், ஒரு குற்றவாளி சிறையிலேயே தற்கொலை செய்துக் கொண்டான்.

இந்நிலையில், முகேஷ், பவன், வினய், அக்ஷய் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குற்றவாளிகளில் 3 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் மரண தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர். தொடர்ந்து, அந்த குற்றவாளிகளான 4 பேரில் 3 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

More News >>