ஃபிபா கால்பந்தின் அரையிறுதி சுற்று கணிப்புகள்.. தி சப்எடிட்டர் ஸ்பெஷல் (வீடியோ)
உலகக்கோப்பை கால்பந்து தொடர் அரையிறுதிப் போட்டியில் மோதப்போகும் அணிகளில் எந்த அணி இறுதிச்சுற்றுக்கு செல்லும் என்ற கணிப்புகளுடன் தி சப்எடிட்டர் குழு சார்பில் வீடியோ..
ரஷ்யாவில் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கடந்த மாதம் 14ம் தேதி முதல் தொடங்கியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 32 அணிகள் பங்கேற்று ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லீக் போட்டிகள், நாக் அவுட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் பிரான்ஸ், உருகுவே, ரஷ்யா, குரோஷியா, பிரேசில், பெல்ஜியம், ஸ்வீடன், இங்கிலாந்து ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறி தங்களது பலத்தை காண்பித்தன.
காலிறுதி போட்டிகளின் முடிவில், பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய நாடுகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில், நாளை (10.7.2018) இரவு 11.30 மணிக்கு முதல் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து, 11ம் தேதி இரவு 11.30 மணிக்கு நடைபெறும் 2வது அரையிறுதிப் போட்டியில் குரோஷியாவும் இங்கிலாந்தும் மோதுகின்றன.
பலம் வாய்ந்த நான்கு அணிகளில் எந்த அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டுள்ளது. இந்த போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
உலகக்கோப்பை 2018 அரையிறுதிப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்து கூடுதல் தகவல்களைத் தருகிறார் ரமேஷ் வெங்கிடசாமி, வீடியோ...