சர்கார் போஸ்டரை கலாய்த்து ரிலீஸ் தேதியை அறிவித்த தமிழ்ப்படம் 2.0
2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப்படம் பல்வேறு திரைப்படங்களை கலாய்த்து, தமிழில் வெளிவந்த முதல் ஸ்பூப் திரைப்படம் என்ற புகழை பெற்று சிறப்பான வரவேற்பையும் பெற்றிருந்தது.
தற்போது அதே கூட்டணியில் தமிழ்ப்படம் 2 தயாராகி வருகிறது. படத்தின் அறிவிப்பு மிக பரபரப்பான அரசியல் நெருக்கடி நிகழ்ச்சியை கலாய்த்து வெளியிடப்பட்டது.
அதன் பின் வந்த அனைத்து விதமான போஸ்டர்கள் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது. மேலும் மேலும் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைக்க, சமீபத்தில் வெளியான பாகுபலி, நடிகையர் திலகம், திரைப்படங்களையும் சேர்த்து, சின்னகவுண்டர் முதல் ஹாலிவுட்-ன் பேட்மேன் படங்களையும் விட்டு வைக்கவில்லை. அனைத்து படங்களையும் கலாய்த்து வெளிவந்த போஸ்டர்கள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளன.
தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ள படக்குழு அதற்கும் ஒரு போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது.
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் சர்கார் திரைப்படத்தின் ஒரு போஸ்ட்டரை கலாய்த்து வெளியிடப்பட்டுள்ளது. அதில் தளபதி விஜய் சொகுசு காரில் அமர்ந்து லேப்டாப்-ஐ உபயோகிப்பது போன்ற ஒரு படத்தினை சிவா ரிக்க்ஷாவில் அமர்ந்து லேப்டாப் உபயோகிப்பது போன்று வெளியிட்டு அதில் ஜூலை 12 என்ற ரிலீஸ் தேதியினை குறிப்பிட்டுள்ளது படக்குழு.
ஆக தமிழ்ப்படம்-2 ஜூலை 12ம் தேதி வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பினை தளபதியின் சர்கார் போஸ்ட்டரை கலாய்த்து பிரபல படுத்தியுள்ளது படக்குழு.