குற்றவாளி தஷ்வந்த் மேல்முறையீடு- தூக்குதண்டனை குறையாது நீடிக்குமா?

சிறுமி ஹாசினியை பாலியல் கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்தின் தூக்குத் தண்டனைக்கு எதிரான மேல்முறையிடு வழக்கு இன்று விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

போரூரை அடுத்த மதனந்தபுரத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிறுப்பில் பெற்றோருடன் வசித்து வந்தார் 6 வயது சிறுமி ஹாசினி. வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஹாசினி திடீரென்று காணாமல் போனார். இதையடுத்து, ஹாசினியின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர்.

காவல் துறை நடத்திய விசாரணையில் அதே குடியிறுப்பில் வசித்து வந்த தஷ்வந்த் என்பவர் ஹாசினியை பாலியல் துன்புறத்தலுக்கு உட்படுத்தி, எரித்துக் கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸ் தஷ்வந்தை கைது செய்து வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு, காஞ்சிபுரம் மகளிர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணை முடிந்த பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி, தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தஷ்வந்த் மேல்முறையீடு மனுவில், பல்வேறு குளறுபடிகள் இந்த வழக்கில் இருப்பதாகவும் அதனால் தன்னை விடுவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று இந்த வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.

More News >>